நல்லாட்சிக்காக ஜனாதிபதி சிறப்பாக செயற்பட்டதாக நோர்வே தூதுவர் தெரிவிப்பு

நல்லாட்சிக்காக ஜனாதிபதி சிறப்பாக செயற்பட்டதாக நோர்வே தூதுவர் தெரிவிப்பு

நல்லாட்சிக்காக ஜனாதிபதி சிறப்பாக செயற்பட்டதாக நோர்வே தூதுவர் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

24 Apr, 2015 | 6:44 pm

எத்தகைய தடைகள் வந்தாலும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும், நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் சிறப்பாக செயற்படுவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறேடா லோச்சன் தெரிவித்துள்ளார்.

நோர்வே தூதுவருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 நாட்கள் செயற்றிட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவது தொடர்பில் நோர்வே தூதுவர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் முன்னெடுக்கும் அர்ப்பணிப்புக்களை ஒருபோதும் மாற்றப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த சந்திப்பில் கூறியுள்ளார்.

புதிய அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகம் வழங்கும் ஒத்தாசை மற்றும் நாட்டில் சமாதானத்தை கொண்டுவருவதற்கு யுத்த காலத்தில் நோர்வே அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பு என்பவற்றுக்கு ஜனாதிபதி தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்