டயகமையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 126 பேர் இடம்பெயர்வு

டயகமையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 126 பேர் இடம்பெயர்வு

டயகமையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 126 பேர் இடம்பெயர்வு

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2015 | 1:24 pm

நுவரெலியா, டயகம​ வெவர்லி தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 126 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

வேவர்லி தோட்டத்தில் நேற்று (23) மாலை பெய்த கடும் மழையால் ஆறொன்று பெருக்கெடுத்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலியா மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ். எச். எம் மஞ்சுல தெரிவிக்கின்றார்.

27 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்துள்ளதுடன் அவர்கள் வெவர்லி ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்

இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை தோட்ட முகாமைத்துவமும், இடர் முகாமைத்துவ மத்திய நிலையமும் இணைந்து வழங்கி வருகின்றன.

மழைக் காலங்களில் ஆறு பெருக்கெடுப்பதால் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாக டயகம வெவர்லி தோட்ட மக்கள் நியூஸ்பெஸ்டுக்கு கூறினர்

இதேவேளை, இன்று (24) காலை 8.30 உடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழை வீழ்ச்சி நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

அத்தோடு இன்று (24) மாலை வேளையில் நாட்டின் அநேகமான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்