சாவகச்சேரி உணவு விடுதி மோதல் தொடர்பில் கைதானவர்கள் விளக்கமறியலில்

சாவகச்சேரி உணவு விடுதி மோதல் தொடர்பில் கைதானவர்கள் விளக்கமறியலில்

சாவகச்சேரி உணவு விடுதி மோதல் தொடர்பில் கைதானவர்கள் விளக்கமறியலில்

எழுத்தாளர் Bella Dalima

24 Apr, 2015 | 6:33 pm

யாழ். சாவகச்சேரியிலுள்ள உணவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரி நகரிலுள்ள உணவகத்தினுள் நேற்றிரவு வாள்களுடன் நுழைந்த குழுவினர், உணவகத்திற்கு சேதம் ஏற்படுத்தியதுடன், அங்கிருந்த இரண்டு ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

தாக்குதலில் காயமடைந்த உணவகத்தின் ஊழியர்கள் இருவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்