சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்து ஆர்ப்பாட்டம்

சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்து ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

24 Apr, 2015 | 9:45 pm

சமுர்த்தி பயனாளிகள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்து, பத்தரமுல்லயில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

பத்தரமுல்ல பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் கூடியவர்கள், பின்னர் பேரணியாகச் சென்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றிருந்தனர்.

சமுர்த்தி அமைச்சு அமைந்துள்ள பத்தரமுல்ல செத்சிறிபாய வரை இவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது, அமைச்சின் செயலாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகள் அடங்கிய மனுவொன்றைப் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, எதிர்ப்பு நடவடிக்கைக்காக அதிகாரிகள் வருகை தந்தமையினால், பல பகுதிகளின் திவிநெகும வங்கி நடவடிக்கைகள் இன்று பாதிக்கப்பட்டன.

சிலாபம் மற்றும் முன்னேஸ்வரம் ஆகிய பகுதிகளிலுள்ள திவிநெகும வங்கிகளுக்குச் சென்ற மக்கள், அங்கு அதிகாரிகள் இல்லாதமையால் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இதேவேளை, ஒரு அரசியல் கட்சியுடன் இணைந்து முன்னெடுக்கும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையைக் கண்டிப்பதாக அகில இலங்கை ஐக்கிய சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்