கிணற்றில் வீழ்ந்து மூன்று வயது சிறுவன் உயிரிழப்பு: விசாரணைகள் ஆரம்பம்

கிணற்றில் வீழ்ந்து மூன்று வயது சிறுவன் உயிரிழப்பு: விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

24 Apr, 2015 | 7:33 pm

புத்தளம் – தில்லையடி பகுதியில் மூன்று வயது சிறுவன் கிணற்றினுள் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டிற்கு அருகிலிருந்த கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து நேற்று (23) மாலை உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் சிறுவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மரணம் சம்பவித்தமை பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்