இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அழைப்பாணை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அழைப்பாணை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அழைப்பாணை

எழுத்தாளர் Bella Dalima

24 Apr, 2015 | 6:14 pm

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (23) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பேருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

டலஸ் அழகப்பெரும, காமினி லொக்குகே, பந்துல குணவர்த்தன, சரத் வீரசேகர, ஜயந்த கெடகொட, எஸ்.எம் சந்த்ரசேன, வீரகுமார திஸாநாயக்க, உதித்த லொக்குபண்டார ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் அழைப்பாணை விடுக்கப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றனர்.

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, உபாலி கொடிகார, ரொஜர் செனவிரத்ன ஆகிய மாகாண சபை உறுப்பினர்களுக்கும், 09 தேரர்களுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் எதிர்ப்பில் ஈடுபடுவதற்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று முன்தினம் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனாலும், நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்று எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கே அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்