மீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி

மீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி

மீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2015 | 7:37 am

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே அரசாங்கத்தின் நோக்கம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் கடற்படையினருக்கு வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 25 படுகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று இலங்கை மீனவர்களும் இந்திய கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அண்மையில் நடைபெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையின்போது வருடத்தில் 83 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு தமிழக மீனவர்கள் அனுமதி கோரியிருந்தனர்.

எவ்வாறாயினும் இந்த அனுமதியை வழங்கப்போவதில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் படகுகளை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையும் தொடரும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்