இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ஜூஸ் பெக்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ஜூஸ் பெக்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

24 Apr, 2015 | 8:52 pm

இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ஒருதொகை ஜூஸ் பெக்கட்டுக்கள் ஜடாயு தீர்த்தம் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்படவிருந்த கேரள கஞ்சா, புகையிலை என்பன தனுஸ்கோடி, பாம்பன், தங்கச்சிமடம் போன்ற கடலோரப் பகுதிகளில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதால், இந்திய கரையோர பாதுகாப்புப் பிரிவினர் தேடுதல் நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், தனுஸ்கோடி செல்லும் வழியிலுள்ள ஜடாயு தீர்த்தம் பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமான குளிர்பான பெக்கட்டுக்கள் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன.

அவை குறித்த பகுதிக்குக் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் இந்திய உளவுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதிக விலைக்கு அவற்றை விற்பனை செய்ய முடியுமென்பதால், இலங்கைக்குக் கொண்டுவர முயற்சித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்