ஆம் ஆத்மியின் பெண் சட்டமன்ற உறுப்பினரிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது

ஆம் ஆத்மியின் பெண் சட்டமன்ற உறுப்பினரிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது

ஆம் ஆத்மியின் பெண் சட்டமன்ற உறுப்பினரிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது

எழுத்தாளர் Bella Dalima

24 Apr, 2015 | 3:29 pm

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் பெண் சட்டமன்ற உறுப்பினரிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற வாலிபரை அக்கட்சியின் உறுப்பினர்கள் தாக்கி, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆம் ஆத்மியின் சட்டமன்ற உறுப்பினர் அல்கா லம்பா, டெல்லி அரசின் சுற்றுலாத்துறை சட்டமன்ற செயலாளராகவுள்ளார்.

இவர் நேற்று (23) டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கவிஞர் மிர்சா காலிப் குடியிருந்த பாரம்பரிய இல்லத்தை பார்வையிடச் சென்றிருந்தார்.

இதன்போது, வாலிபர் ஒருவர் அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். குறித்த வாலிபரை சட்டமன்ற உறுப்பினர் அல்கா அறைந்துள்ளார்.

உடனே அங்கிருந்து தப்ப முயன்ற வாலிபரை, கட்சி உறுப்பினர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்