மஹிந்த ராஜபக்ஸவை சந்திக்கவுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன?

மஹிந்த ராஜபக்ஸவை சந்திக்கவுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன?

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2015 | 6:01 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்றை நடத்துவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு குழுக்களாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளவர்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, மஹிந்த அமரவீர, பியசேன கமகே, ரி.பி.ஏக்கநாயக்க, குமார வெல்கம, மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்​டோர் அங்கம் வகிக்கின்றனர்.

தாம் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடந்த சில நாட்களாக இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரி.பீ.ஏக்கநாயக்க நேற்று (21) கூறியிருந்தார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையிலான சந்திப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்

முன்னாள் ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு விரைவில் திகதியொன்றை அறிவிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்