மருதங்கேணி மக்கள் 10 கோரிக்கைகளை முன்வைத்து அடையாள உண்ணாவிரதம்

மருதங்கேணி மக்கள் 10 கோரிக்கைகளை முன்வைத்து அடையாள உண்ணாவிரதம்

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2015 | 9:40 pm

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச மக்கள் 10 கோரிக்கைகளை முன்வைத்து அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்தனர்.

யுத்தம் மற்றும் சுனாமி ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட உறவுகள் மற்றும் சொத்துக்களை இழந்த தாம், 2010  ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்ட போதிலும், அபிவிருத்திப் பணிகளில் இருந்து தாம் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்னால் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கென தனியான பிரதேசசபை ஒன்றினை உருவாக்குதல்,
பிரதேச வளங்கள் சூறையாடுதலை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

அத்துடன், தென்பகுதி மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பிரதானமாக முன்வைக்கப்பட்டது.

மேலும், தமது பிரதேசத்தின் அபிவிருத்தி புறக்கணிக்கப்படுவது தொடர்பில் பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதிலும், 5 வருடங்களாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்