புன்னகையுடன் வேலை பார்க்கும் அழகிய ரோபோ (PHOTOS)

புன்னகையுடன் வேலை பார்க்கும் அழகிய ரோபோ (PHOTOS)

புன்னகையுடன் வேலை பார்க்கும் அழகிய ரோபோ (PHOTOS)

எழுத்தாளர் Staff Writer

22 Apr, 2015 | 11:09 am

ஜப்பானில் உள்ள  சந்தைக் கட்டிடத் தொகுதி ஒன்றில் மனித உருவம் கொண்ட ரோபோ பணியாற்றி வருகிறது.

பாரம்பரியமான கிமோனோ உடை அணிந்து புன்னகையுடன் வேலை பார்க்கும் இந்த மனித ரோபோ, அனைவரையும் கவர்ந்திழுத்து வருகிறது.

அய்கோ சிஹிரா என்பது இதன் பெயர் டோக்கியோவில் உள்ள மிட்சுகோஷி என்ற விற்பனை நிலையத்தின் நுழைவாயிலில் நின்றபடி கடைக்கு வருவோரை வணங்கி அன்போடு வரவேற்கிறது இந்த ரோபோ.

இதை திடீரென பார்க்கும் யாருக்கும் ரோபோ என்றே தெரியாது மாறாக, மனிதனைப் போலவேதான் தெரியும் நெருங்கிப் பார்த்தால்தான் இது ரோபோ என்று தெரிய வரும்.

ஜப்பானிய பாஷையில் பேசும் மிஹிரா, மனிதர்களைப் போலவே சிரிக்கிறது, பேசுகிறது, கண்ணை இமைக்கிறது. சீன மொழியும் வேறு சில மொழிகளையும் கூட இது பேசுகிறது.

பொருட்களை விலைகளை கூட சரியாக கூறுகிறதாம், மிஹிராவின் உடலில் 43 மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம்தான் அது நடமாடுகிறது.

திங்கட்கிழமை (20) நடந்த அறிமுக விழாவின்போது ஜப்பானிய பாடகர் ஷோகோ இவாஷிடாவுடன் இணைந்து பாட்டுப் பாடி அசத்தியது இந்த சுட்டி மிஹிரா.

BT_20150421_DNROBO213YS8_1627329

89b88eb7-52d3-4286-82de-c92d1436e506

dw-japan-robot-150420e

rbot

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்