பம்பலப்பிட்டியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது

பம்பலப்பிட்டியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது

பம்பலப்பிட்டியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

22 Apr, 2015 | 9:59 am

பம்பலப்பிட்டியிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் களஞ்சியசாலையில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலையின் காவலாளியும், அவரது நண்பரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைதான 2 சந்தேகநபர்களும் இன்று (22) புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

பிரேத பரிசோதனைகளை அடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணின் பூதவுடல் நேற்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

பம்பலப்பிட்டியிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் களஞ்சியசாலையில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

பாடசாலையின் பெண் சிற்றூழியர் ஒருவரே சடலமாக கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்..

பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான காரணம் தெளிவாக குறிப்பிடப்படாத நிலையில் முதலில் அவரது உறவினர்கள் பூதவுடலை பெற்றுக்கொள்ள மறுப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் சிற்றூழியரின் உடற்பாகங்கள் மேலதிக ஆய்வுகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதென பொலிஸார் கூறுகின்றனர்.

ஒரே வாரத்தில் நடைபெற்ற 2 ஆவது சம்பவம் இது.

பெண்களின் தொடர் கொலை குறித்து பொலிஸார் தீவிர விசாரணை செய்துவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்