செயற்படாத கணினியை “தண்டித்த” அமெரிக்கர் கைது!

செயற்படாத கணினியை “தண்டித்த” அமெரிக்கர் கைது!

செயற்படாத கணினியை “தண்டித்த” அமெரிக்கர் கைது!

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2015 | 3:54 pm

தன் கணினி அடிக்கடி பழுதாவதைக் கண்டு விரக்தியடைந்த அமெரிக்கர் ஒருவர் அதை வீட்டுக்கு வெளியே எடுத்து வைத்து தனது துப்பாக்கியால் 8 முறை சுட்டு நொறுக்கியுள்ளார்.

அமெரிக்காவின் கொலராடோ ஸ்ப்ரிங்ஸ் என்ற நகரில் வசிக்கும் லூக்காஸ் ஹின்ச் என்ற நபர் தனது கம்ப்யூட்டரை “ctrl+alt+del” என்ற விசைகளை அழுத்தி பல முறை மீண்டும் இயக்க முயன்றும் அது பலனளிக்காததால், அதை வீட்டுக்கு வெளியே கொண்டு சென்று தன் துப்பாக்கியால் எட்டு முறை சுட்டு தனது ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டாராம்.

ஆனால், நகர எல்லைக்குள் துப்பாக்கியால் சுடுவது அந்த நகரில் குற்றம் என்ற உள்ளூர் சட்டம் உள்ளது. அதை மீறிய குற்றத்துக்காக பொலிஸார் அவரை சிறிது நேரம் தடுத்து வைத்துள்ளனர்.

அவருக்கு என்ன தண்டனை வழங்குவது என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும்.

 

 

தகவல் – பிபிசி


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்