சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பணத்தை கொண்டுசெல்ல முயற்சித்த இந்தியர் கைது

சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பணத்தை கொண்டுசெல்ல முயற்சித்த இந்தியர் கைது

சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பணத்தை கொண்டுசெல்ல முயற்சித்த இந்தியர் கைது

எழுத்தாளர் Staff Writer

22 Apr, 2015 | 1:17 pm

சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பணத்தை நாட்டிலிருந்து கொண்டுசெல்வதற்கு முயற்சித்த இந்தியர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரது பயணப் பையில் மறைத்துவைத்து, வெளிநாட்டுப் பணத்தை நாட்டிலிருந்து கொண்டுசெல்ல முயற்சித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

அவரிடம் 15,500 அமெரிக்க டொலர்கள் இருந்ததாகவும், அவற்றின் பெறுமதி 20 இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமாகும்.

நாட்டிலிருந்து பாங்கொக் செல்வதற்கு முயற்சித்தபோது, சந்தேகநபர் இன்று (22) அதிகாலை கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பணத்தை நாட்டிலிருந்து கொண்டுசெல்ல முயற்சித்த இலங்கையரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில்கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 23,750அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதன் பெறுமதி 31 இலட்சத்து 98 ஆயிரத்து 650 ரூபாவாகும்.

சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 25 வயதான சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சுங்கப் பிரிவு தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்