குட்டிகளுக்கு பாலூட்ட மறுக்கும் சிங்கம்: ஒரு வார காலத்திற்குள் குட்டி ஈன்ற நாய் இருந்தால் அறியத்தரவும்

குட்டிகளுக்கு பாலூட்ட மறுக்கும் சிங்கம்: ஒரு வார காலத்திற்குள் குட்டி ஈன்ற நாய் இருந்தால் அறியத்தரவும்

குட்டிகளுக்கு பாலூட்ட மறுக்கும் சிங்கம்: ஒரு வார காலத்திற்குள் குட்டி ஈன்ற நாய் இருந்தால் அறியத்தரவும்

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2015 | 4:59 pm

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பெண் சிங்கமொன்று மூன்று குட்டிகளை இன்று அதிகாலை ஈன்றுள்ளது.

எனினும், பெண்சிங்கம் தனது குட்டிகளிடம் நெருங்காமை சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளதாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, மூன்று குட்டிகளும் பெண் சிங்கத்திடமிருந்து வேறுபடுத்தப்பட்டு அவை பராமரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

குட்டிகளுக்கு செயற்கை முறையில் பாலூட்டுவதற்கு மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், சிங்கக்குட்டிகளின் உடலுக்கு ஏதேனும் விலங்கின் பாலை வழங்குவதே மிகவும் சிறந்ததென அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், ஒரு வார காலத்திற்குள் குட்டிகளை ஈன்ற பெண் நாய் ஒன்றிருந்தால் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அறியத்தருமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் சிங்கம் ஏற்கனவே ஈன்ற குட்டிக்கும் பாலூட்ட மறுத்ததாக தேசிய மிருகக்காட்சிசாலை தெரிவித்துள்ளது.

எனினும், பெண் நாய் ஒன்றினூடாக குறித்த குட்டிக்கு பாலூட்டப்பட்டதால் அது தற்போது சிறப்பாக வளர்ந்துவருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்