கிண்ணியாவில் பாவனைக்குதவாத மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

கிண்ணியாவில் பாவனைக்குதவாத மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

கிண்ணியாவில் பாவனைக்குதவாத மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

22 Apr, 2015 | 1:33 pm

கிண்ணியாவில், பிரதேச பொது சுகாதார அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாவனைக்குதவாத மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிண்ணியா குட்டி கராச்சி பாலத்திற்கு அருகில் இன்று (22) காலை சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச பொது சுகாதார அதிகாரிகளால் 9 மீன் வியாபாரிகளிடம் இருந்து பாவனைக்குதவாத மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, மீன்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

கைப்பற்றப்பட்ட மீன்கள், மண்ணெண்ணெய் ஊற்றி, அழித்தொழிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பாவனைக்குதவாத மீன்களை விற்பனை செய்யவிருந்த மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்