ஒரே நாளில் 17 பேரை தூக்கிலிட்டது பாகிஸ்தான்

ஒரே நாளில் 17 பேரை தூக்கிலிட்டது பாகிஸ்தான்

ஒரே நாளில் 17 பேரை தூக்கிலிட்டது பாகிஸ்தான்

எழுத்தாளர் Staff Writer

22 Apr, 2015 | 9:02 am

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி, பெஷாவர் இராணுவ பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 132 குழந்தைகள் உற்பட 145 பேரை கொன்று குவித்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, அங்கு மரண தண்டனை கைதிகளின் தண்டனையை நிறைவேற்ற பிறப்பிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், நேற்று (21) ஒரே நாளில் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு சிறைகளில் 17 மரண தண்டனை கைதிகளின் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

குஜ்ரன்வாலா மத்திய சிறையில் 3 பேர், பைசலாபாத்தில் 2 பேர், சியால்கோட்டில் 2 பேர், முல்தானில் ஒருவர், குஜராத்தில் ஒருவர், லாகூரில் 2 பேர், ராவல்பிண்டி அடியலாவில் 3 பேர், குயெட்டாவில் ஒருவர் உற்பட 17 பேருக்கு நேற்று (21) காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மரண தண்டனையை நிறைவேற்ற விதிக்கப்பட்டிருந்த தடை அகற்றப்பட்ட பின்னர், பாகிஸ்தானில் ஒரே நாளில் 17 மரண தண்டனை கைதிகள் தூக்கில் போடப்பட்டது இதுவே முதல் முறை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்