பாடசாலை நேரத்தின் பின்னர் மேலதிக வகுப்புக்களை நடத்த மேல் மாகாண கல்வி அமைச்சு தீர்மானம்

பாடசாலை நேரத்தின் பின்னர் மேலதிக வகுப்புக்களை நடத்த மேல் மாகாண கல்வி அமைச்சு தீர்மானம்

பாடசாலை நேரத்தின் பின்னர் மேலதிக வகுப்புக்களை நடத்த மேல் மாகாண கல்வி அமைச்சு தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2015 | 12:44 pm

கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்காக பாடசாலை நேரத்தின் பின்னர், மேலதிக வகுப்புக்களை நடத்தும் திட்டமொன்றை மேல் மாகாண சபை ஆரம்பித்துள்ளது.

இதன் பிரகாரம் பாடசாலைகள் ஆரம்பமாகும் முன்னரும், பாடசாலை நேரத்தின் பின்னர் மாலை வேளையிலும் மேலதிக வகுப்புக்கள் நடத்தப்படவுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தயா செனரத் குறிப்பிடுகின்றார்.

கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற முக்கிய பாடங்களுடன் மாணவர்களின் கல்வி மட்டத்திற்கு ஏற்றவாறு ஏனைய பாடங்களையும் மேலதிக வகுப்புக்களில் போதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கூறினார்.

பாடசாலைகளிலுள்ள திறமையான ஆசிரியர்களை ஈடுபடுத்தி சகல வகுப்புக்களுக்கும் மேலதிக நேர கல்வியை போதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த திட்டம் மேல் மாகாணத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்டுள்ள பாடசாலகைளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்பொருட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்