மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெல்லாவிற்கு ஒபாமா சிறப்பு விருது

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெல்லாவிற்கு ஒபாமா சிறப்பு விருது

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெல்லாவிற்கு ஒபாமா சிறப்பு விருது

எழுத்தாளர் Bella Dalima

17 Apr, 2015 | 4:35 pm

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ள இந்தியரான சத்யா நாதெல்லா (47) அமெரிக்க அதிபரின் சிறப்பு விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களின் குடும்பத்தினரின் நலனை முன்னிட்டு, சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம், அந்த நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், சமூகத்திலும், பொருளாதாரத்திலும் நல்ல மாற்றங்களைக் கொண்டு வருபவர்களுக்கு அமெரிக்க அதிபரின் “மாற்றத்திற்கான சாம்பியன்’ சிறப்பு விருது அளிக்கப்படுகிறது.

மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் தொடர்புடைய அனைத்துப் பொருள் வழங்கும் நிறுவனங்களின் ஊழியர்களும் பயன்பெறும் வகையில், ஆண்டுக்கு 15 நாட்கள் ஊதியத்தோடு கூடிய விடுப்புத் திட்டத்தை சத்யா நாதெல்லா அண்மையில் அறிவித்தார்.

இதனைப் பாராட்டி அமெரிக்க அதிபரின் சிறப்பு விருது வழங்க சத்யா நாதெல்லா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹைதராபாத்தில் பிறந்த சத்யா நாதெல்லா, அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கச் சென்றார்.

1992 இல் மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் சேர்ந்த அவர், அந்த நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

கடந்த ஆண்டு அதன் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்