CSN இன் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியிடம் சுமார் ஒன்றரை மணித்தியால விசாரணை

CSN இன் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியிடம் சுமார் ஒன்றரை மணித்தியால விசாரணை

எழுத்தாளர் Bella Dalima

15 Apr, 2015 | 8:01 pm

CSN தொலைக்காட்சியின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஷாந்த ரணதுங்க, நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு இன்று முற்பகல் சென்றிருந்த நிஷாந்த ரணதுங்க, சுமார் ஒன்றரை மணித்தியாலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதுபற்றி அவர் தெரிவிக்கையில், நியாயமான சமூகத்திற்கான பிரஜைகள் முன்னணியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடொன்று தொடர்பில், ஆனந்த விஜேபாலவின் அழைப்பின் பேரில் தாம் இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு சென்றிருந்ததாகக் குறிப்பிட்டார்.

CSN தொலைக்காட்சி தொடர்பிலும் அதன் உரிமையை உறுதி செய்வதற்காகவும், வரி சலுகைகள் பெறப்பட்டுள்ளனவா என்பது தொடர்பிலும், தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக தாம் அழைக்கப்பட்டிருந்ததாக மேலும் அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்