விடுமுறையில் சென்றவர்கள் கொழும்பு திரும்ப விசேட பஸ் சேவைகள்

விடுமுறையில் சென்றவர்கள் கொழும்பு திரும்ப விசேட பஸ் சேவைகள்

எழுத்தாளர் Staff Writer

15 Apr, 2015 | 6:50 am

சித்திரைப் புதுவருடப் பிறப்பிற்காக விடுமுறையில் சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக விசேட பஸ் சேவைகள் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்பொருட்டு பல்வேறு பயண முடிவிடங்களில் இருந்து கொழும்பிற்கான பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் டி.எஸ். ஜயவீர குறிப்பிடுகின்றார்.

அத்துடன் காலி, மாத்தறை பகுதிகளில் இருந்து அதிவேக வீதியூடாகவும் கொழும்பு நோக்கி பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

இதேவேளை, சொந்த இடங்களுக்கு சென்றுள்ள மக்கள் கொழும்பு திரும்புவதற்காக விசேட ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ.ஆர். ரத்னாயக்க தெரிவிக்கின்றார்.

குறிப்பாக பதுளை, காலி, மாத்தறை உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்தும் கொழும்பிற்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதுதவிர சேவையில் ஈடுபட்டுள்ள ரயில்களுடன் மேலதிகமாக பெட்டிகளை இணைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் குறிப்பிடுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்