மரதன் ஓட்டப்போட்டியின் போது விபத்து: நான்கு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதின

மரதன் ஓட்டப்போட்டியின் போது விபத்து: நான்கு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதின

எழுத்தாளர் Bella Dalima

15 Apr, 2015 | 9:46 pm

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் மரதன் ஓட்டப்போட்டி நடந்துகொண்டிருந்த ​போது நான்கு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.

மரதன் ஓட்டப் போட்டியைப் பார்ப்பதற்காக முச்சக்கரவண்டி சாரதி முச்சக்கரவண்டியை நிறுத்தியுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றோடொன்று மோதியுள்ளன.

இதன்போது காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் மாரவில பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துறை விநாயகமூர்த்தியின் வாகனமும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ​போதே பாராளுமன்ற உறுப்பினரின் வாகனமும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது எவருக்கும் காயமேற்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்