புருனே சுல்தான் மகனுக்கு தங்கத்தைக் கொட்டி ஆடம்பரத் திருமணம்

புருனே சுல்தான் மகனுக்கு தங்கத்தைக் கொட்டி ஆடம்பரத் திருமணம்

புருனே சுல்தான் மகனுக்கு தங்கத்தைக் கொட்டி ஆடம்பரத் திருமணம்

எழுத்தாளர் Bella Dalima

15 Apr, 2015 | 4:28 pm

புருனே சுல்தான் ஹசன் அல் போல்கியாவின் இளைய மகனும் பட்டத்து இளவரசருமான அப்துல் மாலிக்கின் திருமணம் உலகமே திரும்பி பார்க்கும் வகையில் ஆடம்பரமாக அண்மையில் நடைபெற்றது.

மணமக்கள் இருவரும் தங்கம், வைர நகைகளில் ஜொலித்தனர்.

புதுமணத் தம்பதிகளைக் காண தலைநகர் பண்டர் செரி பெகவனில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

இந்த ஆடம்பரத் திருமண வைபவத்திற்காக பல கோடி ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் புருனே சுல்தான் ஹசன் அல் போல்கியாவும் ஒருவர்.

அவருக்கு மூன்று மனைவிகள், 12 பிள்ளைகள். இதில் 5 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள்.

தற்போது திருமணம் நடைபெற்ற இளவரசர் அப்துல் மாலிக், சுல்தானின் தற்போதைய மனைவி ராணி சேலாஹாவுக்குப் பிறந்தவர்.

இவர் சுல்தானின் 6 ஆவது மகன். அப்துல் மாலிக்கிற்கும் சொப்ட்வெயார் இன்ஜினீயர் தயாங்கு ரபி அதுல் என்பவருக்கும் கடந்த 12 ஆம் திகதி வெகுவிமரிசையாக திருமணம் நடைபெற்றது.

அவர்கள் அணிந்திருந்த ஆடை முழுவதும் தங்கம், வைரங்கள் பதிக்கப்பட்டிருந்தன.

மணமகள் ரபி கையில் வைத்திருந்த பூங்கொத்தில் மலர்களுக்குப் பதிலாக வைரங்கள் கோர்க்கப்பட்டிருந்தன.

அவர் அணிந்திருந்த வைர நெக்லஸ் கண்களைப் பறித்தன. வைர காதணிகள் எட்டுதிக்கும் மின்னின. தலையில் அணிந்திருந்த தங்க கிரீடம் வைரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

காலணிகளைக் கூட முழுவதும் தங்கத்தால் வடிவமைத்திருந்தார்கள்.

ஒட்டுமொத்தமாக உச்சி முதல் உள்ளங்கால் வரை மணமகள் தங்கத்தில் இழைக்கப்பட்டிருந்தார்.

 

277B44DE00000578-3035550-image-a-2_1428832159627

brunei1-650_041315120527

0413_FL-Prince-Abdul-Malik-brunei-wedding-01_1200x750

277B407F00000578-3035550-image-a-22_1428832363754

277E56B000000578-3035550-image-a-2_1428857371990

wedding

CCYXbHEUsAAdBpF

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்