தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

15 Apr, 2015 | 12:23 pm

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி, மீன்பிடியில் ஈடுபடுவதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிடுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதனால் கடல் வளங்களுக்கு பாரியளவு சேதங்கள் ஏற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனால், நாட்டின் கடல் வளங்களை பாதுகாக்கும் நோக்கில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதை முழுமையாக தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்