அண்ணனின் சிகிச்சை செலவிற்காக சுமார் 33 இலட்சம் ரூபா சேர்த்த 5 வயது சிறுமி

அண்ணனின் சிகிச்சை செலவிற்காக சுமார் 33 இலட்சம் ரூபா சேர்த்த 5 வயது சிறுமி

அண்ணனின் சிகிச்சை செலவிற்காக சுமார் 33 இலட்சம் ரூபா சேர்த்த 5 வயது சிறுமி

எழுத்தாளர் Staff Writer

15 Apr, 2015 | 3:29 pm

மாற்றுத் திறனாளியான தனது 7 வயது அண்ணனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தெருவில் எலுமிச்சம் பழச்சாறு விற்று 33 இலட்சம் ரூபா பணத்தை 5 வயது சிறுமி சேர்த்துள்ளார்.

அமெரிக்காவின் டொரண்டோ நகரைச் சேர்ந்த நாடாவ் என்ற சிறுவனுக்கு 2 வயதான போது ஏஞ்சல்மேன் சிண்ட்ரோம் என்ற நரம்பு மண்டலத்தைப் பாதிப்படைய வைக்கும் கொடிய நோய் தாக்கியது. நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனின் மூளையின் செயற்திறனும் பேச்சுத்திறனும் தடைப்பட்டது.

சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லாததால் அவனது பெற்றோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனா்.

இந்த சோகத்தைப் பகிர்ந்துகொள்வதோடு மட்டுமின்றி, அதைத் தீர்க்கும் வழியையும் தேடி தங்களது பெற்றோர் நடத்திவரும் தெருவோரக் கடையில் கோடைக்காலத்தில் எலுமிச்சம் பழச்சாறு, குளிர்காலத்தில் சூடான சாக்லேட் பாணங்களையும் விற்று தனது அண்ணனுக்காக சுமார் 25 ஆயிரம் அமெரிக்க டொலர்களை சேர்த்துள்ளார் நாமா உஸான் எனும் சிறுமி.

இந்த சிறுமிக்காகவே அந்த தெருவோரக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் ஒருவர் 20 ஆயிரம் டொலர்களை நாடாவின் சிகிச்சை செலவுக்கு நிதியாக உதவியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்