யாழ். நீரில் கழிவு எண்ணெய் கலப்பு தொடர்பான ஆய்வு தன்னிச்சையானது என குற்றச்சாட்டு

யாழ். நீரில் கழிவு எண்ணெய் கலப்பு தொடர்பான ஆய்வு தன்னிச்சையானது என குற்றச்சாட்டு

எழுத்தாளர் Bella Dalima

07 Apr, 2015 | 6:14 pm

யாழ்ப்பாணத்தில் நீரில் கழிவு எண்ணெய் கலக்கப்படவில்லை என நிபுணர் குழுவின் அறிக்கை தெரிவிப்பதாக வடமாகாண விவசாய அமைச்சர். பி ஐங்கரநேசன், வடமாகாண சபை இன்று கூடிய போது தெரிவித்தார்.

தனியார் நிறுவனமொன்று தன்னிச்சையாக இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் சபையில் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடமாகாண சபையின் 27 ஆவது அமர்வு அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானத்தின் தலைமையில், கைதடியில் உள்ள மாகாண சபைத் கட்டடத்தொகுதியில் இன்று கூடியது.

வடமாகாண சபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள எம்.பி நடராஜை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.

பின்னர் குடிநீர் மாசு தொடர்பான விசேட உரையில் நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து விவசாய அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

இதன் போது தனியார் நிறுவனமொன்று தன்னிச்சையாக இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் சபையில் குற்றம் சுமத்தியுள்ளார்.

மாகாண சபைக்கு அறிவிக்காமல் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் இதன் போது குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வன்னி மாவட்டத்தில் உள்ள பிரதேச சபைகளுக்குத் தகுதியான செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் வடமாகாண சபையில் இரண்டு பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்