பெரும் பணக்காரர்கள் பட்டியலில் சீனா சாதனை

பெரும் பணக்காரர்கள் பட்டியலில் சீனா சாதனை

பெரும் பணக்காரர்கள் பட்டியலில் சீனா சாதனை

எழுத்தாளர் Bella Dalima

07 Apr, 2015 | 4:08 pm

சீனாவில் 500 கோடி ரூபாவுக்கும் மேல் சொத்துடைய பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்த 2014 ஆம் ஆண்டு 17,000 ஆக உயர்ந்தது.

நாட்டின் பொருளாதாரம் மந்தகதியில் இருந்த சூழலிலும், அந்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சீனா மின்ஷெங் வங்கியும், ஹுரன் ஆய்வு நிறுவனமும் இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 கோடி யுவான்களுக்கு (ரூ.508 கோடி) மேல் சொத்து கொண்ட இந்த 17,000 பேரின் மொத்த சொத்து மதிப்பு 31 இலட்சம் கோடி யுவான்களைத் (ரூ.315 இலட்சம் கோடி) தாண்டுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

அதாவது, இவர்கள் அனைவரின் சொத்து மதிப்பும், நோர்வே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட 10 மடங்கு அதிகம். பிலிப்பின்ஸ் நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட 20 மடங்கு அதிகம்.

இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் பணக்காரர்களுக்கான சொத்து வரம்பை 50 கோடி யுவான்களாக ஹுரன் ஆய்வு நிறுவனம் உயர்த்தியுள்ளது.

அந்த நிலையிலும், மிக அதிக பெரும் பணக்காரர்கள் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பெரும் பணக்காரர்கள் உற்பத்தித்துறை, வீடுமனை விற்பனைத் துறை, தொழில்முறை முதலீட்டுத் துறையைச் சார்ந்தவர்கள் என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்