ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2015 | 1:21 pm

பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (06) மாலை பாகிஸ்தான் ஜனாதிபதி மம்நூன் ஹுசைனை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையில் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இரு தலைவர்களிடையேயும் கலந்துரையாடல் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் ரினாஸ் மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என பாகிஸ்தான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் பாகிஸ்தான் ஜனாதிபதி வழங்கிய விருந்துபசார நிகழ்விலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்