சிரேஷ்ட அறிவிப்பாளர் கமலினி செல்வராஜன் இயற்கை எய்தினார்

சிரேஷ்ட அறிவிப்பாளர் கமலினி செல்வராஜன் இயற்கை எய்தினார்

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2015 | 11:54 am

சிரேஷ்ட அறிவிப்பாளரும் கலைஞருமான கமலினி செல்வராஜன் இன்று (07) காலை 9.30 அளவில் இயற்கை எய்தியுள்ளார்.

கமலினி செல்வராஜன் சைவ தமிழ் அறிஞர் தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளையின் புதல்வியாவார்.

இவர் ஊடகவியலாளராகவும், வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளராகவும், திரைப்பட மற்றும் மேடை நடிகையாகவும்  கலைத்துறையில் சேவையாற்றியுள்ளார்.

கமலின் செல்வராஜா ஈழத்து கவிஞர் சில்லையூர் செல்வராஜாவின் மணைவியாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பொரளையில் நாளை (08)  நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்