அரச தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் நியூஸ்பெஸ்ட்,சிரச, சக்திக்கு 5 விருதுகள்

அரச தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் நியூஸ்பெஸ்ட்,சிரச, சக்திக்கு 5 விருதுகள்

எழுத்தாளர் Bella Dalima

07 Apr, 2015 | 7:47 pm

அரச தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் சிறந்த தொலைக்காட்சி செய்தி அறிக்கையிடலுக்கான விருது நியூஸ்பெஸ்ட்டின் கந்தவேள் மயூரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வடபகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் தொடர்பான அவரது செய்தி தொகுப்பிற்காகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர சிறந்த ஆங்கில மொழி நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கான விருது நியூஸ்பெஸ்ட்டின் மஹீனா பொன்சோவிற்குக் கிடைத்துள்ளது.

சிறந்த அரங்க வடிவமைப்பிற்கான விருது சிரச ரிவியின் சிசில் ரத்நாயக்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிறந்த நேர்காணல் நிகழ்ச்சிக்கான விருது நியூஸ்பெஸ்ட்டின் “சித்திஜய” விற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறந்த தமிழ் இசை நிகழ்ச்சிக்கான விருது சக்தி தொலைக்காட்சியின் சுபர்ஸ்டார் நிகழ்ச்சிக்கு கிடைத்துள்ளது.

அரச விருது வழங்கும் விழா இன்று மாலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்