கஹவத்த பகுதியில் பெண்ணொருவரை காணவில்லை

கஹவத்த பகுதியில் பெண்ணொருவரை காணவில்லை

கஹவத்த பகுதியில் பெண்ணொருவரை காணவில்லை

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2015 | 10:26 am

கஹவத்தை கொட்டகெதன பகுதியில் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த பெண் வீட்டிலிருந்து அதிகாலை ஒரு மணியளவில் காணாமல் போனதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது பெண்ணின் கணவர் வெளி இடத்திலிருந்ததாகவும், பின்னர் வீட்டிற்கு சென்ற போது பெண் காணாமல் போயிருந்ததாகவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது, குறித்த வீட்டின் பின்புற கதவு திறக்கப்பட்ட நிலையில் அங்கு இரத்த கசிவுகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து காணாமல் போயுள்ள பெண்னை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்