கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு

கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு

கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2015 | 8:32 am

கல்கமுவ திவுல்லேவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு 10 மணியளவில் அநுராதபுரம் நோக்கி சென்ற வேன், வீதியை விட்டு விலகி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சாரதியின் தூக்க கலக்கத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார். குறிப்பிட்டுள்ளனர்.

வேனில் 17 பேர் பயணித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த 13 பேர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி 82 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்களில் 11 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதில் 4 பெண்களும் 2 வயது குழந்தையும் அடங்குவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்