போதைப்பொருள் சுற்றிவளைப்பிற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் விசேட பிரிவுகள்

போதைப்பொருள் சுற்றிவளைப்பிற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் விசேட பிரிவுகள்

போதைப்பொருள் சுற்றிவளைப்பிற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் விசேட பிரிவுகள்

எழுத்தாளர் Staff Writer

04 Apr, 2015 | 10:49 am

ஹெரோய்ன் உள்ளிட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பிற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் விசேட பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அந்த பிரிவுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிடுகின்றார்.

அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்புகளை முன்னெடுப்பதற்கும், சந்தேகநபர்களை கைது செய்வதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறுப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கொழும்பிலும், கொழும்பை அண்மித்த பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் சுற்றிவளைப்பு விசேட பிரிவுகள் செயற்பட்டு வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்