புறக்கோட்டையில் சுற்றிவளைப்பு : தரமற்ற தராசுகளை வைத்திருந்த 18 பேர் கைது

புறக்கோட்டையில் சுற்றிவளைப்பு : தரமற்ற தராசுகளை வைத்திருந்த 18 பேர் கைது

எழுத்தாளர் Bella Dalima

04 Apr, 2015 | 9:10 pm

புறக்கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தரமற்ற தராசுகளை,
அளவை அலகுகளின் தரம் மற்றும் சேவைகள் திணைக்களம் கைப்பற்றியுள்ளது.

இந்த சுற்றிவளைப்பின் போது 25 தராசுகள் கைப்பற்றப்பட்டன.

தரமற்ற தராசுகளை வைத்து முறைகேடு செய்து வந்த 18 வர்த்தகர்களும் கைது செய்யப்பட்டதாக, அளவை அலகுகளின் தரம் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்தது.

சுற்றிவளைப்பின் போது சில வர்த்தகர்கள் தரமற்ற தராசுகளை வர்த்தக நிலையங்களில் விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சில வர்த்தகர்கள் தம்மிடம் இருந்த தரமற்ற தராசுகளை மறைத்து, இலத்திரனியல் தராசுகளையும் பொருத்தியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்