கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை பாகிஸ்தான் விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை பாகிஸ்தான் விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை பாகிஸ்தான் விஜயம்

எழுத்தாளர் Staff Writer

04 Apr, 2015 | 9:03 am

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை பாகிஸ்தான் பயணமாகவுள்ளார்.

பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசேய்ன் மற்றும் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோரின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி அந்த நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த விஜயத்தின்போது பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

இதுதவிர இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சில உடன்படிக்கைகளும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்