சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தலவாக்கலையில் சக்தியின் விசேட நிகழ்வுகள்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தலவாக்கலையில் சக்தியின் விசேட நிகழ்வுகள்

எழுத்தாளர் Bella Dalima

04 Apr, 2015 | 10:11 pm

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, நியூஸ்பெஸ்ட், சக்தி டி.வி மற்றும் சக்தி எப்.எம் இணைந்து நடத்தும் நிகழ்வுகள் தலவாக்கலை நகரில் நாளை காலை முதல் நடைபெறவுள்ளன.

தலவாக்கலை நகர் மற்றும் நகரசபை மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், நியூஸ்பெஸ்ட்டின் விசேட நடமாடும் கலையகம் அங்கு அமைக்கப்பட்டுள்ளதோடு, திரைப்பரீட்சை மற்றும் குரல் தேர்வுகளும் நாளை காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளன.

திரைப்பரீட்சை தேர்வில் தெரிவு செய்யப்படும் ஒருவருக்கு நாளை மாலை 5.25 மணித்தியால செய்தியை வாசிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்