குளியாப்பிட்டிய பகுதியில் வாளால் வெட்டி ஒருவர் கொலை

குளியாப்பிட்டிய பகுதியில் வாளால் வெட்டி ஒருவர் கொலை

குளியாப்பிட்டிய பகுதியில் வாளால் வெட்டி ஒருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

04 Apr, 2015 | 12:30 pm

குளியாப்பிட்டிய, எபலாதெனிய பகுதியில் வாளால் வெட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் நேற்று இரவு 10.30 அளவிலேயே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குளியாப்பிட்டிய, வெளிஆரவத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு ஒன்றை சமரசப்படுத்த முயற்சித்தப் போதே குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்தாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்