கிரான் வாவியில் இறந்து கரையொதுங்கும் மீன்கள்

கிரான் வாவியில் இறந்து கரையொதுங்கும் மீன்கள்

எழுத்தாளர் Bella Dalima

04 Apr, 2015 | 9:29 pm

மட்டக்களப்பு – கிரான் வாவியில் கடந்த சில தினங்களாக மீன்கள் இறந்து கரையொதுங்கி வருகின்றன.

இது தொடர்பில் கடற்றொழில் நீரியல்வள அதிகாரிகள் இன்று ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கிரான் வாவியின் கிரான், தோணிமடு, கும்புறுமூலை மற்றும் கிண்ணியடி வரையிலான சுமார் 7 கிலோமீற்றர் பகுதியில் மீன்கள் இறந்து கரையொதுங்குவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

பல்வகை மீனினங்களும் இறந்து காணப்படுவதாக மக்கள் தெரிவித்தனர்.

50 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலை செய்துவரும் இந்த வாவியில் தற்போது மீன்பிடித் தொழிலை செய்ய முடியாதுள்ளது.

இதன் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்