கடந்த அரசாங்கத்தினால் வட மாகாணத்திற்கான நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை – விஜயகலா மகேஸ்வரன் குற்றச்சாட்டு

கடந்த அரசாங்கத்தினால் வட மாகாணத்திற்கான நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை – விஜயகலா மகேஸ்வரன் குற்றச்சாட்டு

எழுத்தாளர் Bella Dalima

04 Apr, 2015 | 9:25 pm

கடந்த அரசாங்கத்தினால் வட மாகாணத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மகளிர் விவகார அமைச்சு ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாம் மற்றும் சட்ட உதவி நடமாடும் சேவைகள் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டன.

மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில், கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் இந்த மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கருத்துத் தெரிவித்த விஜயகலா மகேஸ்வரன், வட, கிழக்கில் உள்ள விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்ற போதும் கடந்த காலங்களில் எவ்விதமான அபிவிருத்திப் பணிகளும் அங்கு முன்னெடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.
காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்