ஐ.நா உதவி பொதுச் செயலாளர் இன்று இலங்கை விஜயம்

ஐ.நா உதவி பொதுச் செயலாளர் இன்று இலங்கை விஜயம்

ஐ.நா உதவி பொதுச் செயலாளர் இன்று இலங்கை விஜயம்

எழுத்தாளர் Staff Writer

04 Apr, 2015 | 9:26 am

ஐக்கிய நாடுகளின் உதவி பொதுச் செயலாளர் ஹவுலியேங் ஷூ இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஹவுலியேங் ஷூ எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இந்த காலப்பகுதியில், புதிய அரசியல் சூழ்நிலையின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கான தேவைகளை அடையாளம் காண்பதற்காக அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடவுள்ளார்.

ஐநா உதவி பொதுச் செயலாளர், வட மத்திய மற்றும் வட மாகாணங்களுக்கும் விஜயம் செய்வதற்கு எண்ணியுள்ளதாக கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் குறிப்பிடுகின்றது.

இதன்போது, அந்த மாகாணங்களிலுள்ள அரச உயரதிகாரிகள், பிரஜைகள் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் பயனாளிகளையும் ஹவுலியேங் ஷூ சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் மேலும் கூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்