ஊழலற்ற புதிய நாடொன்றை உருவாக்க வேண்டும் – ரவி கருணாநாயக்க

ஊழலற்ற புதிய நாடொன்றை உருவாக்க வேண்டும் – ரவி கருணாநாயக்க

ஊழலற்ற புதிய நாடொன்றை உருவாக்க வேண்டும் – ரவி கருணாநாயக்க

எழுத்தாளர் Bella Dalima

04 Apr, 2015 | 6:14 pm

ஊழலற்ற புதிய நாடொன்றை உருவாக்க வேண்டும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் புதிய அரசாங்கத்திற்கு நிதி தேவையான அளவு கிடைப்பதாகக் குறிப்பிட்ட நிதி அமைச்சர், அந்த நிதியை ஊழல் இல்லாத அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வீதி ஒன்றை அமைப்பதற்கு 10 இலட்சம் ரூபா செலவாகும் என்றால் அதற்கு 100 இலட்சம் செலவிடுவது அபிவிருத்தியல்ல எனவும் ஊழலைக் குறைப்பதல்ல, அதனை முழுமையாக இல்லாதொழித்து புதிய நாடொன்றை உருவாக்குவதே தமது நோக்கம் என குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்