கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இலங்கை மீனவர்கள் 6 பேர் இந்தியாவில் கைது

இலங்கை மீனவர்கள் 6 பேர் இந்தியாவில் கைது

எழுத்தாளர் Bella Dalima

04 Apr, 2015 | 7:23 pm

இலங்கை மீனவர்கள் 6 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னைக்கு 154 கடல்மைல் தொலைவில் நேற்று (03) இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மீனவர்களின் படகு ஒன்றும் இந்தியக் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்டின் இராமேஸ்வரம் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்த 37 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை நீதவான் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்தது.

இதன்போது இந்திய மீனவர்கள் 37 பேரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

இந்திய மீனவர்களின் 05 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்