இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

04 Apr, 2015 | 2:39 pm

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்தபோது கைது செய்யப்பட்ட 37 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்கள் இன்று (04) பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது இந்திய மீனவர்கள் 37 பேரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்திய மீனவர்களின் 05 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, இலங்கை மீனவர்கள் 6 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர் .

சென்னைக்கு 154 கடல்மைல் தொலைவில் நேற்று (03) இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மீனவர்களின் படகு ஒன்றும் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் பறிமுல் செய்யப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்டின் இராமேஸ்வரம் செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு மத்திய அரசு உடனடி தீர்வு காண வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை நடைபெறுகின்ற சந்தர்ப்பங்களில் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று தோன்றுகின்ற போதிலும், மீனவர்களின் பிரச்சினை தொடர் கதையாகவே உள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் பாரபட்சமின்றி கைது செய்யப்படுவார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்