ஆபத்தில் இருந்த உரிமையாளரை காப்பாற்றிய நாய் (Video)

ஆபத்தில் இருந்த உரிமையாளரை காப்பாற்றிய நாய் (Video)

எழுத்தாளர் Staff Writer

04 Apr, 2015 | 11:45 am

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கிளாரென்ஸ் ஜெ. பிரௌன் அணை மற்றும் நீர்த்தேகத்தில் கடும் சகதியில் சிக்கிய உரிமையாளரை அவரது செல்ல பிராணியான நாய் காப்பாற்றியுள்ளது.

உரிமையாளரும், அவரது செல்ல பிராணியும் அணைப்பகுதிக்கு வந்த பின், அவர் மட்டும் நீர்த்தேக்கத்திற்குள் சென்றுள்ளார்.

நீண்ட தூரம் நீர்த்தேக்கத்திற்குள் சென்ற அவர் மார்பளவு தண்ணீரில் மூழ்க நேரிட்டது. அதே சமயம் அப்பகுதியில் சகதியும் மிக மோசமாக இருந்தது. இந்த நிலையில் சகதியிலிருந்து வெளியேற முடியாமல் அந்த நபர் தவித்தார். ஆனால் அவரிடம் கையடக்கத்தொலைபேசி மட்டும் உடனிருந்தது.

அதை கொண்டு 911 அவசர சேவை மையத்தை அழைத்தார். விரைந்து வந்த மீட்பு படையை சேர்ந்த இரு நபர்களும் அணைக்குள் நுழைய முடியாததை உணர்ந்து கொண்டனர் உள்ளே சென்றால் அவர்களும் சகதியில் சிக்கிக்கொள்வார்கள் என புரிந்தது.

இந்த நிலையில் தனது உரிமையாளருக்கு உதவ அவரது செல்ல பிராணி முன் வந்தது, மீட்பு படையினர் நாயின் கழுத்தில் கயிற்றை கட்ட, நாய் கயிற்றை சுமந்தவாறு தண்ணீரில் நீச்சல் அடித்து உரிமையாளரிடம் சென்றது.

அவர் நாயிடமிருந்து கயிற்றை பெற்று தன் உடலில் கட்டிக்கொள்ள, கரையிலிருந்த மீட்பு படையினர் கயிற்றை பிடித்து இழுத்து அந்த நபரை தண்ணீருக்குள் இருந்து வெளியே கொண்டு வந்து காப்பாற்றினர்.

ஒரு வழியாக உயிர் பிழைத்த அந்த உரிமையாளர் மீட்பு படையினருக்கு நன்றி தெரிவித்ததுடன், தனது செல்லப்பிராணியையும் கட்டி அனைத்துக் கொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்