19 ஆவது அரசியலமைப்பு  திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீண்டும் பரிசீலனை

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீண்டும் பரிசீலனை

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீண்டும் பரிசீலனை

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2015 | 10:10 pm

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மீண்டும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், சந்திரா ஏகநாயக்க மற்றும் பிரியசாத் டெப் ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு ஆதரவின் கீழ் நிறைவேற்ற முடியும் என இந்த மனு தாக்கல் செய்துள்ள, ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என மனு தாக்கல் செய்துள்ள மற்றுமொரு தரப்பினர் வாதிடுகின்றனர்.

இது தொடர்பில் இன்றும் பல தரப்புகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

திங்கட் கிழமை மீண்டும் இந்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்து கொள்ளவுள்ளதுடன் , இதன் போது சட்டமாதிபருக்கு ஒரு மணித்தியாலம் விளக்கமளிக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்