ஸ்ரீ பொன்னம்பல வானேஸ்வரர் ஆலய இரதோற்சவம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது

ஸ்ரீ பொன்னம்பல வானேஸ்வரர் ஆலய இரதோற்சவம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2015 | 6:43 pm

கொழும்பு மாநகர் கொச்சிக்கடையில் கோயில் கொண்ட புகழ்மிகு சிவாலயமான ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் இரதோற்சவம் வெகுவிமர்சையாக இன்று நடைபெற்றது.

வரலாற்று சிறப்பு மிக்க கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று காலை உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் பக்தர்கள் புடைசூழ ஆலயத்தின் உள்வீதியை வலம் வந்து இரதத்தில் எழுந்தருளினர்.

ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை காலை தீர்த்தோற்சவத்துடன் நிறைவுப் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்