ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வலுப்படுத்துவதே எனது எதிர்பார்ப்பு – பவித்திரா வன்னியாராச்சி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வலுப்படுத்துவதே எனது எதிர்பார்ப்பு – பவித்திரா வன்னியாராச்சி

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2015 | 7:56 pm

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் பெரும்பான்மையினரின் தீர்மானத்திற்கு அமைவாகவே இராஜாங்க அமைச்சர் பதவியை பொறுப்பேற்றதாக பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

உத்தியோகப்பூர்வமாக கடமைகளை இன்று (02)  பொறுப்பேற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

சுற்றாடல் இராங்க அமைச்சராக இன்று தனது கடமைகளை பவித்திரா வன்னியாராச்சி பொறுப்பேற்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம் அதே போன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் பெறும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே இராஜாங்க அமைச்சராக பதவியை பொறுப்பேற்றதாகவும் இந்த அமைச்சு ஊடாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வலுப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்