ரஷ்யாவில் 132 பேருடன் பயணித்த கப்பல் கடலில் மூழ்கி விபத்து

ரஷ்யாவில் 132 பேருடன் பயணித்த கப்பல் கடலில் மூழ்கி விபத்து

ரஷ்யாவில் 132 பேருடன் பயணித்த கப்பல் கடலில் மூழ்கி விபத்து

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2015 | 2:03 pm

ரஷ்யாவின் கம்சட்க்கா தீபகற்ப பகுதியில் உள்ள ஓகோட்ஸ்க் கடல் பகுதியில் 132 பேருடன் சென்ற கப்பல் மூழ்கி, விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் குறைந்தபட்சம் 54 பேர் பலியாகியிருக்கலாம் என்று மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது வரை 63 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் ஏனைய 26 பேரின் நிலை தொடர்பில் எதுவும் தெரியவில்லை என்று கம்சட்க்கா பகுதியின் மீட்பு பணிக்குழு தெரிவித்துள்ளது.

கப்பல் குழுவினரை மீட்கும் பணியில் 25 இற்கும் மேற்பட்ட மீன் பிடி படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

படகு மூழ்கியதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. எனினும் கடலில் பனிக்கட்டிகள் நகரந்தது காரணமாக இருக்கலாம் என்று செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

படகில் பயணம் செய்த குழுவினர் ரஷ்யா,லதிவா,உக்ரைன், மியான்மர் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்