முரணான விடயங்களுக்காக அரசாங்கம் செயற்பட்டு வருகிறது – அனுரகுமார திசாநாயக்க

முரணான விடயங்களுக்காக அரசாங்கம் செயற்பட்டு வருகிறது – அனுரகுமார திசாநாயக்க

முரணான விடயங்களுக்காக அரசாங்கம் செயற்பட்டு வருகிறது – அனுரகுமார திசாநாயக்க

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2015 | 8:57 pm

நிறைவேற்று சபையில் எதிர்பார்க்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பதிலாக, அரசாங்கம் முரணான
விடயங்களுக்காக செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவிக்கின்றார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

இதேவேளை, நிறைவேற்றுக்குழு கூட்டங்களின் போது சில தீர்மானங்களை எடுத்ததாக அனுர குமார திசாநாயக்க இன்று தெரிவித்தார்.

19 அரசியலமைப்பு திருத்தத்தை, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு உடன்படும் வகையில் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அதிகபட்சமாக தலையீடு
செய்தல் அவற்றுள் ஒரு தீர்மானமாகும்.

தகவல் அறியும் சட்டத்தை ஏப்ரல் மாதம் 7,8,9,10 ஆகிய தினங்களில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவும், ஊடகத்துறை ஆலோசனை செயற்குழுவை கூட்டி, கலந்துரையாடுவதற்கும் நிறைவேற்று குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

மக்களின் விருப்பத்தை நியாயமான முறையில் நிறைவேற்றும் தேர்தல் முறையொன்றை
தயாரிப்பதற்காக ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கு நிறைவேற்றுக்குழு இணக்கம் தெரிவித்ததாக அனுர குமார திசாநாயக்க குறிப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்